பதவியேற்று முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி செல்லும் பிரதமர்...

Update: 2024-06-11 16:12 GMT
பதவியேற்று முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி செல்லும் பிரதமர்...

மத்தியில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, பதவியேற்ற பின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்த வாரம் இத்தாலி செல்ல உள்ளார். 

ஜி7 உறுப்பு நாடுகளின் உச்சி மாநாடு, வருகின்ற 13-ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை இத்தாலி நாட்டின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் நடக்க உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செல்கிறார். 

மேலும், இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன், ஜப்பான் பிரதமர் பூமியோ ஹிசாடியா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார். 

Source : Dinamalar 

Tags:    

Similar News