பிரதமர் மோடி இத்தாலி பயணம், காந்தி சிலையை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

Update: 2024-06-13 07:49 GMT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் பொறுப்பில் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து லோக்சபா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு மத்தியில் பொறுப்பில் அமர்ந்துள்ளது. இதனால் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் முதல் நூறு நாட்களில் மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்கள் அனைத்தையும் மோடி அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வருகின்ற 13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை இத்தாலியில் பஷானோ நகரில் உள்ள அவுலியாவில் ஜி 7 நாடுகளில் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொள்வதற்கு இந்த வாரம் இத்தாலி செல்ல உள்ளதாக செய்திகள் வெளியானது. 

இந்த நிலையில் இத்தாலியில் உள்ள காந்தி சிலையை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி உள்ளனர். மேலும் சிலை பீடத்தில் வாசகங்களையும் எழுதியுள்ளனர். ஏற்கனவே கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜார் கொலை விவகாரத்தை இந்தியர்கள் மீது குற்றம் சாடியது கனடா. 

அதுமட்டுமின்றி, இது குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு கனடா உளவு அமைப்புத் தலைவர்கள் ரகசியமாக இந்தியாவிற்கு இருமுறை பயணங்கள் மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இப்படி இருக்கும் சூழ்நிலையில், கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்திப் சிங் கொல்லப்பட்டதை கண்டித்தே காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிக்கு செல்ல உள்ள நிலையில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Source : Dinamalar 

Tags:    

Similar News