சொன்னதை செய்பவர் தான் மோடி.. விவசாயிகள் நலனில் உடனடி நடவடிக்கை எடுத்த மத்திய அரசு..
நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பதவியேற்ற உடன் போட்ட முதல் கையெழுத்து விவசாயத் துறை சம்பந்தப்பட்டது தான். குறிப்பாக விவசாயிகள் இந்தியாவில நலமுடன் இருக்க வேண்டும். விவசாயத்தை அவர்கள் தொடர்ந்து லாபகரமான முறையில் செய்ய வேண்டும் என்பதற்காக பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்கும் என்று அவர் உறுதி அளித்து இருந்தார். அதன்படி தற்போது நடவடிக்கைகளை விரைவாக மத்திய அமைச்சகம் எடுத்து இருக்கிறது. மத்திய வேளாண், விவசாயிகள் நல அமைச்சகத்தின் 100 நாள் செயல் திட்டம் குறித்த கூட்டத்தை இன்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நடத்தினார். பிரதமர் உறுதிப்பாட்டின்படி பணிகள் விரைந்து நடைபெறும் வகையில், விவசாயிகள் சார்ந்த பணிகளில் அதிகாரிகள் தங்களது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று சவுகான் கேட்டுக் கொண்டார்.
நாட்டின் வேளாண் துறையை வலுப்படுத்தவும், விவசாயிகளின் பிரச்சனைகளை களையவும் வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். நமது விவசாய சகோதர, சகோதரிகளுக்கு தரமான உரங்கள், விதைகள், பிற இடுபொருட்கள் கிடைப்பதை முன்னுரிமை அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இது தொடர்பாக விவசாயிகள் எந்த பிரச்சனையையும் எதிர்கொள்ளக்கூடாது என்றும், இது குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
நாட்டில் வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய மத்திய அமைச்சர், நமது உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதைத் தவிர, உலகின் பிற நாடுகளுக்கு அவற்றின் தேவைகளுக்கு ஏற்ப தரமான வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய உறுதியான திட்டத்தை நாம் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Input & Image courtesy: News