மீண்டும் உறுதியான மரண தண்டனை... பயங்கரவாதியின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசு தலைவர்!

Update: 2024-06-13 16:31 GMT

கடந்த 2000 ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி அன்று லஷ்கர் ஏ தொய்பா பயங்கரவாதிகள் ஆறு பேர் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்து ரஜபுத்தின ரைபிள்ஸ் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மூன்று வீரர்கள் உயிரிழந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதல் நடந்து முடிந்து நான்கு நாட்களுக்கு பிறகு லஷ்கர் ஏ தொய்வா பயங்கரவாதியான முகமது ஆரீஃபை டெல்லி காவல்துறை கைது செய்தது. மேலும் இவர் பாகிஸ்தானை சேர்ந்தவராகவும் இருந்துள்ளார். 

அதுமட்டுமின்றி 2005 ஆம் ஆண்டில் டெல்லி விசாரணை நீதிமன்றம், டெல்லி செங்கோட்டைக்குள் நடந்த தாக்குதலை செயல்படுத்த பிற பயங்கரவாதிகளுடன் சேர்ந்து ஆரீஃப் சூழ்ச்சியில் ஈடுபட்டதால் அவருக்கு மரண தண்டனை விதித்தது. ஆனால் இந்த தீர்ப்புக்கு எதிராக ஆரீஃப் டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவை இரண்டுமே தள்ளுபடி செய்யப்பட்டது. 

இருப்பினும் மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக கடந்த மே 15ஆம் தேதி குடியரசு தலைவரிடம் ஆரீஃப் கருணை மனுவை அளித்தார். ஆரீஃப்பின் மனுவை பரிசளிக்க குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஆரீஃப் செய்த குற்றத்தின் தீவிரம், அதனால் நாடு முழுவதும் எழுந்த தேச பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆரீஃப்பின் கருணை மனுவை நிராகரித்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் ஆரீஃப்பின் மரண தண்டனை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News