ஓசி டிக்கெட்டால் நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து.. சிறைப்பிடித்து கிராம பெண்கள் போராட்டம்..
தி.மு.க தலைமையிலான அரசாங்கம் தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு, மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 5 திட்டங்களில் ஒன்று, பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டம். பல்வேறு விமர்சனங்களுக்கு, எதிர்ப்புகளுக்கும் மத்தியில் திட்டம் தொடங்கப்பட்டது. குறிப்பாக பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் பொழுது, அவர்களை 'ஓசி டிக்கெட்' என்றெல்லாம் கேலி கிண்டலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வந்தது.
அது மட்டும் கிடையாது பல்வேறு பகுதிகளில் இலவச பேருந்துகளில் செல்லும் மகளிர்களுக்கு பயணம் செய்யும் பேருந்துகளில் நடத்துனர்களின் செயல்களால் சங்கடங்களும் ஏற்படுவதை பார்க்க முடிகிறது. திமுக அமைச்சர் பொன்முடி கூட, இலவச பேருந்தில் பயணம் செய்யும் மகளிரை ஓசி டிக்கெட் என்று கேலி செய்து இருக்கிறார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் கல்வார்பட்டி ஊராட்சியை சேர்ந்த கிராமம் சிங்கிலிக்காம்பட்டி. இந்த கிராமத்திற்கு அரசு பேருந்து சென்று வருகின்றது. அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் அரசு பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏன் இந்த திடீர் போராட்டம்? என்று கிராம பெண்களிடம் கேட்ட பொழுது, எங்கள் ஊருக்கு வரும் அரசு பேருந்து எங்களை ஏற்றாமல் நீண்ட தூரம் ஓட விடுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அரசு பேருந்து ஓசி டிக்கெட் என்று பெண்களை பஸ்ஸில் ஏற்ற மறுப்பதாகவும், இதனால் தான் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறுப்படுகிறது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News