இனி எல்லைப் பகுதியில் மாஸ் காட்ட போகும் இந்தியா.... மோடி அரசின் புதிய தற்கொலைப்படை ட்ரோன்கள்!

Update: 2024-06-15 13:57 GMT

நம் நாட்டின் எல்லைக்குள் நுழைய முற்படும் பயங்கரவாதிகளை தாக்கி, பயங்கரவாதிகளின் முகாம்களையே அழிக்கும் தற்கொலைப்படை ட்ரோன்கள் நம் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரி சேர்ந்த சோலார் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தின், எகனாமிக்ஸ் எக்ஸ்ப்லோசிஸ் நிறுவனம், நம் நாட்டின் ராணுவத்திற்கு உபயோகப்படும் இந்த ட்ரோன்களை வடிவமைத்துள்ளது. இந்த ட்ரோனில் வெடிகுண்டு வைத்து, அதற்கான இலக்கு நிர்ணயித்து அனுப்பி வைத்தால் மட்டுமே போதும். 

அதற்குப் பிறகு இந்த ட்ரோன் தனக்கு பொருத்தப்பட்டிருக்கும் இலக்கு எந்த இடத்தில் இருக்கிறதோ அங்கு சென்று வானத்தில் காத்திருந்து, சரியான நேரத்தில் தாக்கி தனது இலக்கை அழிக்கும் தன்மை கொண்டது. இந்த ட்ரோன்கள் மூலம் நமது நாட்டின் எல்லைக்கு அப்பால் இருக்கும் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது சர்ஜிகல் ஸ்டிரைக் எனப்படுகின்ற துல்லிய தாக்குதலை மேற்கொள்ள முடியும். 

அதுமட்டுமின்றி இவற்றை நம் வீரர்கள் எளிதில் எடுத்துச் செல்லவும் முடிகிறது. மேலும் இந்த வகை ட்ரோன்கள் தன் இலக்கை அடைந்தவுடன் வானிலிருந்து நேராக தன் இலக்கு நோக்கி சென்று, தன்னையும் அழித்து, இழக்கையும் அழிக்கும் என்பதாலே இவை தற்கொலைப்படை ட்ரோன் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இவற்றிக்கு நாகாஸ்திரா என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த வகை ட்ரோன்கள் பற்றிய பல்வேறு சோதனைகளுக்குப் பிறகே மத்திய அரசு இந்த ட்ரோன்களுக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதனை அடுத்து முதல் கட்டமாக 480 டோன்கள் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் 120 ட்ரோன்கள் தற்போது இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Source : Dinamalar 

Tags:    

Similar News