ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு முக்கியம்.. அதிகாரிகளுடன் அமித் ஷா முக்கிய ஆலோசனை..

Update: 2024-06-16 11:48 GMT

காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சமீபத்தில் பள்ளத் தாக்கில் கவிழ்ந்தது. காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத சம்பவங்கள் என்பது தொடர்கதையாகவே இருந்து வந்தது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமை ஏற்ற பிறகு காஷ்மீருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதிலும் குறிப்பாக சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 ஆர்டிகளை தடை செய்த பிறகு காஷ்மீர் மற்ற மாநிலங்களைப் போல காணப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்ய முடியாத பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் செய்தது. ஆனால் தற்போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போது, 9 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலின் எதிரொலியாக டெல்லியில் உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.


இதனைத் தொடர்ந்து, அமர்நாத் யாத்திரை தொடங்குவதை முன்னிட்டு, ஜூன் 16-ம் தேதி இன்று உயர்நிலைக் குழு கூட்டத்துக்கு அவர் அழைப்பு விடுத்தார். அந்த வகையில், டெல்லி நார்த் பிளாக்கில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News