இந்து கோயிலுக்குள் பசுவின் தலை வீச்சு.. நான்கு பேர் மீது பாய்ந்தது தேசிய பாதுகாப்பு சட்டம்..

Update: 2024-06-19 11:39 GMT

மத்தியப் பிரதேசத்தின் ஜாரா நகரில் உள்ள ஒரு கோயிலில் பசுவின் வெட்டப்பட்ட தலையை வீசிய குற்றத்திற்காக நான்கு பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை அதிகாலையில் பசு மாட்டினை கொன்று அதன் உடல் பாகங்களை கோயில் வளாகத்தில் வீசி எறிந்ததாகக் கூறப்படுகிறது. இது இந்த மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து காவல்துறைத் துணைத்தலைவர் மனோஜ் குமார் சிங் கூறும் போது, "மத உணர்வுகளை புண்படுத்தியதற்காகவும், இன்னும் பிற குற்றங்களுக்காகவும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சல்மான் மேவதி, ஷாகிர் குரேஷி, நோஷாத் குரேஷி மற்றும் ஷாருக் சத்தார் ஆகியோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளர்கள். மேலும், அவர்கள் அந்தப் பகுதியில் அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

இருப்பினும், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் எந்தவித அசாம்பாவிதமும் நடைபெறவில்லை. மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், காவல்துறை மற்றும் நிர்வாகத்தை கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த சம்பவத்திற்குப் பிறகு சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News