மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து தாக்கப்படும் பாஜகவினர் : அதிகார துஷ்பிரயோகம் செய்யும் திரிணாமுல் காங்கிரஸ்!

Update: 2024-06-19 11:53 GMT

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிறகு வெடித்த வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆளுநரை சந்திப்பதற்காக அந்த மாநிலத்தின் பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளார். ஆனால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே 144 தடை இருப்பதை சுட்டிக்காட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சுவேந்து அதிகாரியை மாளிகைக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இருப்பினும், ஆளுநரை சந்திப்பதற்கான அனுமதியை சுவேந்து அதிகாரிக்கு ஆளுநர் எழுத்துப்பூர்வமாக அளித்திருந்த போதிலும், காவல்துறையினர் ஆளுநர் மாளிகைக்குள் அவரை அனுமதிக்காத செயல் அம்மாநிலத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

மேலும் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென ஆளுநர் போஸ் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். மேலும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, மேற்கு வங்க காவல் துறையினரால் ஆளுநர் போஸ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதனை அடுத்து சுவேந்து அதிகாரிக்கு ஆளுநர் மாளிகைக்குள் செல்வதற்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்து மாநில காவல் துறையினரும் ஆளுநர் மாளிகை விட்டு வெளியேறும்படி ஆளுநர் போஸ் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஆளுநர் மாளிகையில் வடக்கு நுழைவாயிலில் அமைந்திருக்கும் புறக்காவல் நிலையத்தை பொதுமக்களை சந்திக்கும் இடமாக மாற்ற திட்டமிடப்பட்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Tags:    

Similar News