மத்திய பாஜக அரசு திட்டங்களை பயன்படுத்த தவறும் திறனற்ற திமுக அரசு : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

Update: 2024-06-20 13:23 GMT

பிரதமர் கௌரவநிதி திட்டத்தில் கீழ் 20,000 கோடி ரூபாய் பண பரிமாற்றத்தை, தான் பதவியேற்ற முதல் நாளிலே பிரதமர் விடுவித்த நிலையில், தமிழக விவசாயிகளுக்கு மட்டும், இதன் மூலம் பலன் கிடைக்கவில்லை என மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக நாமக்கலில் பேசியவர், விவசாயிகளுக்கான பிரதமர் கவுரவ நிதி திட்டத்தின் 17 வது தவனையின் கீழ், 9.26 கோடி பயனாளிகளுக்கு, 20,000 கோடி ரூபாய் பண பரிமாற்றத்தை பிரதமர் நரேந்திர மோடி ஒரே நேரத்தில் விடுவித்தார். அதுமட்டுமின்றி, இப்கோ மூலம் வேளாண் தோழிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி மகளிர் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு நாடு முழுவதும் உருவாக்கியுள்ளார். 

பிரதமரின் விவசாய நிதி திட்டத்தின் பலன் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும். மேலும் தமிழகத்திலும் உள்ள விவசாயிகளும் பலன் அடைய வேண்டும். அதற்காக அவர்கள் தங்கள் பெயரை இந்த திட்டத்தில் பதிவு செய்து கொள்வதற்கு அரசு அலுவலர்கள் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் இதுவரை பயன் பெறவில்லை. 

எனவே அனைத்து விவசாயிகளையும் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுவதற்கு, அவர்களின் பெயர்களை இத்திட்டத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Source : Dinamalar 

Tags:    

Similar News