திமுக ஆட்சியில் தலை தூக்கிய கள்ளச்சாராய பலிகள் பட்டியல் இதோ! சுடுகாடாய் மாறும் தமிழகம்!
2021 முதல் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பிலிருந்து வரும் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பெரும் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் திமுகவின் ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்பனையும், அதனால் மக்கள் உயிரிழக்கும் அவலங்களும் பெருகி வருகிறது. அந்த வகையில் திமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாராய பலிகள் பட்டியல் இதோ,
19 மே 2008
2006 முதல் 2011 இடைப்பட்ட காலங்களில் திமுக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுது, 2008 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதி கிராமங்களில் கள்ளச்சாராயத்தால் 54 பேர் உயிரிழந்தனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் 14 பேர் உயிரிழந்த சம்பவமும் நடந்தது. மேலும் எத்தனால் அதிகரித்த கள்ளச்சாராயத்தை குடித்ததால் பலர் கண்பார்வையை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
13 மே 2023
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ஏக்கியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் 2023 மே 13ஆம் தேதி மரக்காணம் ஈசிஆர்-ல் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, புதுச்சேரி பீம்ஸ் மற்றும் ஜிப்மர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இதில் பெண் உட்பட 6 பேர் முதலில் சிகிச்சை பலனின்றி இறந்ததோடு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் அடுத்தடுத்து இருந்தனர். அதுமட்டுமின்றி, செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் 5 பேர் உயிரிழந்து மொத்த பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது.
19 ஜூன் 2024
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தால் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர். மேலும் பெண்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
21 ஜூன் 2024
மேலும் இன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு. மேலும் 20 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
2016 இல் திமுக உறுதிமொழி
முன்னதாக 2016 இல் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு சொட்டு மது கூட இருக்காது என பல பிரசாரங்களையும், முழக்கங்களையும் முன்வைத்து வந்த திமுக, தற்போது ஆட்சியில் பொறுப்பில் அமர்ந்திருக்கும் பொழுதே தொடர்ச்சியாக 2023 மற்றும் 2024 ஆகிய வருடங்களில் கள்ளச்சாராயத்தால் பல உயிர்கள் பலி ஆகியுள்ளது!