தீவிரவாத மாவோயிஸ்ட்கள், நக்சலைட்டுகளின் கண்ணிவெடி குண்டுகளால் உயிர் இழக்கும் பழங்குடி இன மக்கள்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தர், சுக்மா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மற்றும் நக்சல் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக ஆங்காங்கே தீவிரவாதிகள் கண்ணி வெடிகளை புதைத்து வைத்துள்ளனர். ஆனால் இந்த கண்ணிவெடிகள் மூலம் அந்த வனப்பகுதியில் வசித்து வருகின்ற கிராம மக்கள் சிக்கி உடல் உறுப்புகளை இழப்பது மற்றும் உயிர் இழப்பது அதிகமாக நடந்து வருகிறது.
இந்த வரிசையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு சத்தீஸ்கரின் சுக்மா பகுதியில் வசித்து வந்த 13 வயதான சுக்கி மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி, அந்த சிறுமியின் வலது கால் அகற்றப்பட்டுள்ளது. இதற்கு நான் என்ன தவறு செய்தேன்? யார் கண்ணி வெடியை வைத்தார்கள். அந்த கண்ணி வெடியால் எனது வலது காலை இழந்து விட்டேன். மீண்டும் இதே போன்று கண்ணி வெடியில் சிக்கி விடுவேனோ என்று பயமாக உள்ளது. இதிலிருந்து என்னையும் எனது கிராம மக்களையும் யார் காப்பாற்றுவார்கள் என கண்ணி வெடியில் சிக்கி தனது வலது காலை இழந்த சிறுமி கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இது மட்டுமின்றி கடந்த ஆறு மாதங்களில் இது போன்ற தாக்குதல்களால் நான்கு கிராமவாசிகள் மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு வீரர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் 26 வீரர்கள் படுகாயம் அடைந்ததோடு, ஏராளமான விலங்குகளும் இதில் உயிரிழந்துள்ளன என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அதோடு, கண்ணி வெடியில் சிக்கி தனது காலை இழந்த சுக்கி தனது தோழிகளுடன் சுக்மா மாவட்டம் பீமாபுரம் கிராமத்தின் வனப்பகுதியில் இலுப்பை மரத்தின் பழங்களை பறிக்க சென்ற பொழுது மாவோயிஸ்டுகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி தனது வலது காலை இழந்துள்ளார். மேலும் அவளுடன் வந்த தோழிகள் சிறு காயங்களோடு தப்பித்தனர். இருப்பினும் அப்பகுதிகளில் வாகன வசதிகள் இல்லாததால் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு சுக்கியை தூக்கிச் சென்று, அதற்குப் பிறகு ஒரு 10 கிலோமீட்டர் தொலைவு டிராக்டரில் அழைத்து சென்றோம். அதற்குப் பிறகு 100 கிலோமீட்டர் தொலைவில் ஆம்புலன்ஸில் பயணம் செய்து, ராய்ப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சை வழங்கினோம் என்று தெரிவித்துள்ளனர்.