கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும்! ஆளுநரை சந்தித்த அண்ணாமலை!

Update: 2024-06-24 10:03 GMT

தமிழக முழுவதும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ள கள்ளச்சாராய விவகாரத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து, 12 பேர் தனது கண் பார்வையையும் இழந்துள்ளனர். மேலும் இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு சிபிசிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது, அதனால் சிபிசிஐடி விசாரணை எப்படி நேர்மையானதாக இருக்கும் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி சிபிஐ விசாரணையை கோரி வருகின்றனர். 

அந்த வகையில் இன்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டுமென தமிழக ஆளுநருக்கு மனு அளித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலையதள பக்கத்தில், தமிழகம் முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் பெருகியிருக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கத்தை, திமுக அரசு கண்டும் காணாமல் இருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

திமுக அரசின் இந்த அஜாக்கிரதையால், கள்ளக்குறிச்சியில் 60 உயிர்களை, கள்ளச்சாராயத்துக்குப் பறிகொடுத்துள்ளோம். கள்ளச்சாராய விற்பனையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து சிபிஐ விசாரணை கோரி, இன்றைய தினம், தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் இணைந்து, நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களைச் சந்தித்தோம்.

மேலும், இத்தனை உயிர்கள் பலியான பின்னரும், இதற்குப் பொறுப்பான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முதலமைச்சர் திரு.ஸ்டாலின் இருப்பதும், பொதுமக்களிடையே பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. உடனடியாக, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்ய முதலமைச்சரை வலியுறுத்த வேண்டும் என்றும், மாண்புமிகு ஆளுநரைக் கேட்டுக் கொண்டோம் என தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News