கள்ளக்குறிச்சி விவகாரம்.. தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு அதிரடி ஆய்வு..

Update: 2024-06-26 11:31 GMT

தமிழகத்தில் உள்ள கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில், தற்போது வரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினர் குஷ்பு ஆய்வு நடத்தி இருக்கிறார். கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு விவரங்களை கேட்டறிந்தார்.


கள்ளச்சாராய விவகாரத்தில் இன்று காலை வரை 61 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிப்பதாக அறிவித்திருந்தது. அதோடு நடிகையும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் குஷ்பு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து காவல் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். இதையடுத்து கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News