பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவிலில் நூலகமா? பொங்கி எழுந்த இந்துமுன்னணி..

Update: 2024-06-26 11:31 GMT

வேலூர் பாலாற்றின் கரையில் குடிகொண்டு தன்னை நாடிவரும் மக்களின் குறைகளை தீர்த்து நலம் காத்து வருகிறாள் உலகாளும் நாயகி, கிராம தேவதை செல்லியம்மன். இந்தச் செல்லியம்மன் கோவில் வேலூரில் மிகவும் பிரபலமானது. மன்னர்கள் காலம் தொட்டு இன்றுவரை வேலூரில் உள்ள கோட்டை ஜலகண்டேஸ்வரர், தாரகேஸ்வரர் கோயில்களின் பிரம்மோற்சவ விழாக்களின்போது இந்த அம்மனுக்கு முதல் பூஜை செய்த பிறகுதான் பிற நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்லும் பிரசித்தி பெற்ற கோவிலாக செல்லியம்மன் கோயில் விளங்கி வருகிறது.


இந்த நிலையில் தற்போது இந்த கோவிலில் நூலகம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அனுமதித்து இருக்கிறது. இது தொடர்பாக இந்து முன்னணி தன்னுடைய தீவிர கண்டன பதிவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு இருக்கிறார்கள். இது பற்றி இந்துமுன்னணி கூறும் பொழுது, "வேலூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் நூலகம் அமைக்க ஏற்பாடு செய்தனர்.


தகவல் அறிந்து அங்கு சென்ற நமது பொறுப்பாளர்கள், கோவிலுக்குள் நூலகம் அமைக்க கூடாது, அப்படி அமைத்தால் இந்துக்களை ஒருங்கிணைத்து இந்து முன்னணி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும், மேலும் இதுகுறித்து இந்து அறநிலையத்துறை செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்து இருப்பதாகவும்" இந்து முன்னணியினர் கூறியிருக்கிறார்கள்.

Input & Image courtesy: Hindumunnani

Tags:    

Similar News