தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்தியர்கள் : உலக அளவில் முதலிடம் -அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா?
வெளிநாடுகளில் வேலை செய்து சம்பாதித்து ஒன்பது லட்சம் கோடியை தனது தாய் நாடான இந்தியாவிற்கு அனுப்பி இந்தியர்கள் சாதனை படைத்து உலக அளவில் முதல் இடத்தில் உள்ளனர்.
வெளிநாடுகளில் வேலை செய்து தாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். அவர்கள் 17 பில்லியன் டாலர்களை அதாவது இந்திய மதிப்பில் சுமார் ஒன்பது லட்சம் கோடியை தமது குடும்பங்களுக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளனர். வெளிநாடுகளில் கடினமாக உழைத்து சேர்த்து வைத்த பணத்தை இந்தியாவில் உள்ள தமது குடும்பங்களுக்கு அனுப்புவதில் இந்தியர்கள் எப்போதுமே முன்னிலையில் உள்ளனர் .
அந்த வகையில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக இந்தியர்கள் அனுப்பும் பணம் 100 பில்லியன் டாலரைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 2023-24 நிதி ஆண்டில் 107 பில்லியன் டாலரை அவர்கள் தாய்நாட்டுக்கு அதாவது இந்தியாவுக்கு அனுப்பி உள்ளனர். இது இந்தியா ஈர்த்த அந்நிய நேரடி மற்றும் நிதி நிறுவன முதலீடுகளான 54 பில்லியன் டாலரைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுக்கு பணம் அனுப்பும் மிக முக்கிய ஆதாரமாக அமெரிக்கா உள்ளது .
இரண்டாவது இடத்தில் மெக்சிகோ உள்ளது. வெளிநாடு வாழ் பணியாளர்கள் அதிக பணம் அனுப்பும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை தொடர்ந்து மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகியவை உள்ளன. ரிசர்வ் வங்கி ஆய்வுப்படி கொரோனா தொற்றுக்குப் பிறகு வளைகுடா பிராந்தியத்தில் இருந்து வரும் பண வரத்து குறைந்துள்ளது. அதே நேரம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட மொத்த தொகையில் 23 சதவீதம் அமெரிக்காவிலிருந்து வந்துள்ளது .
இந்த பணம் பெரும்பாலும் குடும்பத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் ஒரு பகுதி வைப்புத் தொகை போன்ற பிற சொத்துகளில் முதலீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் வருமான நாடுகளில் காணப்படும் பலவீனமான வேலைவாய்ப்பு சந்தை மற்றும் உலக பொருளாதார சுனக்கம் காரணமாக குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு அனுப்பப்படும் பண வளர்ச்சி விகிதம் 3.1 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது.
SOURCE :Newspaper