விழுப்புரம், கள்ளக்குறிச்சியை தொடர்ந்து திருப்பூரில் நடந்த சட்டவிரோத செயல்! மறுக்கும் காவல்துறை! பின்னணி என்ன?

Update: 2024-06-30 17:19 GMT

கடந்த வாரம் முழுவதும் கள்ளக்குறிச்சியில் எழுந்த மரண ஓலைகள் இன்னும் தமிழக மக்கள் மனதில் இருந்து நீங்காமல் உள்ள நிலையில், திருப்பூர் உடுமலையில் சட்டவிரோத மதுபானம் குடித்ததால் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட, உடுமலை வனச் சரக்கத்திற்கு உட்பட்ட மாவட்ட பழங்குடியினர் குடியிருப்பில் மதுபானம் காய்ச்சப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும், இதனை குடித்து ஐந்து பேர் கடும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த வருடத்தில் விழுப்புரம் மரக்காணம் பகுதியில் ஏற்பட்ட துயர சம்பவம், அதனை தொடர்ந்து இந்த வருடம் கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியாகி ஒட்டுமொத்த தமிழகத்தையுமே உலுக்கியது. மேலும் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயம் அழிக்கப்பட்ட சம்பவம் குறித்து குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாநிலத்தின் பல பகுதிகளில் இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுகிறதா என தீவிர விசாரணை மற்றும் கண்காணிப்பு நடந்து வருகிற நிலையிலும் உடுமலையில் நடந்துள்ள இந்த சம்பவத்திற்கு முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதாவது உடுமலை வனப்பகுதியில் சட்டவிரோதமாக மது அருந்தியதால் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகள் பொய்யானது என்று போலீசார் இச்செய்தியை மறுத்துள்ளனர். இருப்பினும் மற்ற ஆதாரங்கள், மஞ்ச நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த நபர்கள், காய்ச்சப்பட்ட மதுவை உட்கொண்டவர்கள் உண்மையிலேயே ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், சிகிச்சையில் இருப்பதாகவும் கூறுகின்றனர். 

திமுக தன் ஆட்சிப் பொறுப்பில் போதைப் பொருள்களையும் தடுக்க மறந்து விட்டதோடு தற்போது மீண்டும் மீண்டும் சட்டவிரோதமாக மதுபானம் காய்ச்சப்பட்டு, அதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலினின் திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குறித்த சம்பவங்கள் ஏற்கனவே இரண்டு நடந்து தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், மூன்றாவது சம்பவத்தையும் தற்போது தமிழகம் கண்டுள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Source : The Commune 

Tags:    

Similar News