கஞ்சா போதைக்கு அடிமையாகி கத்தி முனையில் கொள்ளை....அச்சத்தில் கண்டெய்னர் ஓட்டுநர்கள்!

Update: 2024-07-01 17:09 GMT

துறைமுகப் பகுதியில் அதிகாலை நேரத்தில் லாரி ஓட்டுநர்களைக் குறிவைத்து கத்தி முனையில் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக சென்னை கண்டெய்னர் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டை முன்வைத்ததோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. 

குறிப்பாக மீஞ்சூர், மணலி, மாதவரம், பொன்னேரி, திருவெற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா போதையில் தனி நபர்களால் கடுமையான கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாகவும், இந்த குற்றவாளிகள் லாரிகளை மறித்து டிரைவர்களிடம் இருந்து பணம் மற்றும் செல்போன்களை திருடுகின்றனர். இதற்கு தீர்வாக, சூர்ய நாராயணா சாலை முதல் துறைமுக ஜீரோ கேட் வரை தொடர்ந்து ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுமாறு சென்னை கண்டெய்னர் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த அச்சுறுத்தல் கட்டுப்படுத்தப்படாவிட்டால், இது நகர்ப்புறங்களுக்கும் பரவி, பொதுமக்களிடையே துயரத்தை ஏற்படுத்தும் என்றும் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். 

இது குறித்து சென்னை கண்டெய்னர் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தினர் பேசும்பொழுது, டோல்கேட் முதல் ஜீரோ கேட் பவர் குப்பம் வரை பாதுகாப்பு இல்லை. இரவு நேரங்களில், கஞ்சா புகைத்துவிட்டு, ஐந்து முதல் ஆறு பேர், அடிக்கடி வாகன ஓட்டிகளிடம் வந்து, கத்தியை காட்டி மிரட்டி, செல்போன் மற்றும் பணத்தை பறிப்பது வழக்கமாக நடக்கிறது. கடந்த வாரம் இதே போன்று நான்கு ஓட்டுனரிடம் ஒரே நேரத்தில் இரண்டு பேர் பணம் மற்றும் ஓட்டுனரின் மொபைல் போனை மிரட்டி பறித்து சென்றுள்ளனர். அந்த சம்பவத்தின் பொழுது உடனடியாக பாதிக்கப்பட்ட ஓட்டுநர் 100 ஐ அழைத்துள்ளார். காவல் அதிகாரியும் வந்து குற்றவாளி ஒருவரை பிடித்து சென்றுள்ளனர். மேலும் சூரிய நாராயண சாலை முதல் துறைமுக ஜீரோ கேட்டு வரை 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம் என கூறியுள்ளார். 

Source : The Commune 


Tags:    

Similar News