எதிர்க்கட்சித் தலைவர் ஒரு சிறு குழந்தை : ராகுல் காந்தி பெயரைக் குறிப்பிடாமல் கிண்டல் செய்து கதை சொல்லிய மோடி!
எதிர்க்கட்சித் தலைவரின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் ஒரு சிறு குழந்தை என கிண்டல் செய்து மக்களவையில் பிரதமர் மோடி ஒரு கதை கூறினார். அது மட்டும் இல்லாமல் 543-க்கு 99 பெற்றுள்ளீர்கள். 100க்கு அல்ல என்றும் கூறினார்.
பாஜகவை தோற்கடித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் நினைத்துக் கொள்கின்றன.தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் 100-க்கும் குறைவான இடங்களையேப் பெற்றுள்ளது. 1984-க்கு பிறகு காங்கிரஸ் ஒருமுறைகூட 250-க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்லவில்லை. தனது தோல்வியைக் காங்கிரஸ் கட்சி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு 99 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.100க்கு 99 பெறவில்லை. 543-க்கே 99 பெற்றுள்ளது. தோல்வி பெறுவதில் காங்கிரஸ் உலக சாதனை படைத்து வருகிறது. பாஜக-காங்கிரஸ் நேருக்கு நேர் போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸின் வெற்றி விழுக்காடு 26%தான்.
சிறுபிள்ளைத்தனமான சேட்டைகளை மக்களவையில் நேற்று நாம் அனைவரும் பார்த்தோம்.பச்சிளம் குழந்தைபோல் ஒருவர் அழுததைப் பார்த்தோம். பள்ளி மாணவன் பிறரை குற்றம் சொல்வதைப் போல பேசினார். ராகுல் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் மோடி கிண்டல் செய்தார்.இந்துக்களை அவமதிப்பதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. ஜனநாயகம் தழைத்தோங்குவதற்கு காரணமே இந்து மதம்தான். கோடிக்கணக்கான இந்துகளின் மனதை ராகுல் புண்படுத்திவிட்டார். மக்களவையில் ராகுல் காந்தி பேசியதற்கு மக்கள் 100 ஆண்டுகள் ஆனாலும் மன்னிக்கமாட்டார்கள் . இவ்வாறு மக்களவையில் பிரதமர் மோடி பேசினார்.
SOURCE :News