மீண்டும் தலைதூக்கும் சாதி வெறி.. அரசுப்பள்ளியில் இரு சமூக மாணவர்கள் இடையே மோதல்.. இருவர் படுகாயம்..

Update: 2024-07-04 10:30 GMT

நெல்லை மாவட்டத்தில் உள்ள மூன்றடைப்பு பகுதியை அடுத்த மருதகுளம் கிராமத்தில் உள்ள ரோஸ்லின் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளியில் மருதகுளம்,பொன்னாக்குடி, மாயனேரி உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதிய உணவு இடைவேளையின் போது, பள்ளி வளாகத்திற்கு உள்ளே இரு வேறு சமூகங்களை சேர்ந்த மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இந்த மோதலில் 12 ஆம் வகுப்பு மாணவருக்கு கை மற்றும் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. பள்ளி நிர்வாகத்தினர் தலையிட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களை கலைத்து, வன்முறையில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் காயமடைந்த மாணவர்கள் அவசரமாக மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாயனேரியைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களை சாதி அடிப்படையிலான இழிவான வார்த்தைகளை உபயோகித்ததால் இந்த மோதல் ஏற்பட்டதாக பொன்னக்குடியைச் சேர்ந்த ஒரு மாணவர் கூறியிருக்கிறார். மேலும் இது சாதி அடிப்படையிலான வன்முறையைத் தூண்டி உள்ளது. 


மேலும் ரோஸ்லின் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளியில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதால் காயமடைந்த மாணவர்களின் உறவினர்கள் வேதனை தெரிவித்தனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க பள்ளி நிர்வாகம் தவறிவிட்டதாக குற்றம்சாட்டினர். அரசு பள்ளிகளில் இதுபோன்ற சாதி அடிப்படையில் ஆன சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே இந்த சம்பவத்தை போன்று கடந்த முறை நடந்து இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு பள்ளி மாணவன் மற்றும் அவனது சகோதரி அரிவாளால் வெட்டப்பட்டனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy:The Commune News

Tags:    

Similar News