நோயைக் குணப்படுத்துவதிலும் கட்டுப்படுத்துவதிலும் இந்தியா முன்னிலை- மோடி ஆட்சியில் முன்னேறிய மருத்துவத்துறை!

கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியின் கீழ் எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. மருத்துவத்துறையும் எண்ணற்ற மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கண்டுள்ளது. நோயைக் குணப்படுத்துவதில் மட்டுமல்லாமல் கட்டுப்படுத்துவதிலும் இந்தியா முன்னிலையில் உள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-06 16:27 GMT

நோயைக் குணப்படுத்துவதில் மட்டுமல்ல நோய் வராமல் தடுப்பதிலும் இந்தியா சர்வதேச அளவில் முன்னணியில் இருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேரேந்திரசிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் உள்ள கல்லீரல் மற்றும் பித்த நீர் அறிவியல் நிறுவனத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லீரல் தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தவும் குணப்படுத்தவும் மெய்நிகர் முறையிலான இந்தியா- பிரான்ஸ் கல்லீரல் வளர்ச்சிதை மாற்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வலைப் பின்னலை மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சக இணை அமைச்சர் ஜிதேந்திரசிங் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நோயைக் குணப்படுத்தும் மருத்துவத்தில் மட்டுமல்லாது நோய் தடுப்பு மருத்துவத்திலும் சர்வதேச அளவில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. மெய்நிகர் முறையில் ஆன இந்த சிகிச்சை முறை கல்லீரல் புற்றுநோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த உதவும். கல்லீரலில் அதிக கொழுப்பு சேர்வதால் சிறுவயதிலேயே நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பல நோய்களுக்கு காரணமாகிறது. நான் ஒரு நாளமில்லா சுரப்பி மருத்துவர் என்பதால் கல்லீரலில் அதிக கொழுப்பின் அபாயத்தையும் அது தொடர்பான மற்ற நோய்கள் பற்றியும் அறிந்திருக்கிறேன்.

கல்லீரலில் கொழுப்பு சேருவதை பல்வேறு நிலைகளில் கண்டறிவதற்கு எளிதான குறைந்த செலவிலான பரிசோதனை முறைகளை உருவாக்குவது அவசியம். மூன்று இந்தியர்களில் ஒருவர் கல்லீரலில் அதிக கொழுப்பையும் முன்கூட்டிய  நீரிழிவையும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளையும் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News