குமரிக்கு வருகிறது 'வந்தே பாரத்' ஸ்லீப்பர்!

ஸ்ரீ நகரில் இருந்து வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் கன்னியாகுமரிக்கு இயக்கப்படுகிறது.

Update: 2024-07-10 00:46 GMT

நாடு முழுவதும் தற்போது பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. முழுக்க முழுக்க ஏசி வசதி கொண்ட இந்த ரயில்களில் சொகுசான இருக்கைகள், தானியங்கி கதவுகள் ,wi-fi வசதி என விமான பயணத்துக்கு இணையான வசதிகள் இந்த ரயில்களில் உள்ளன. கடந்த ஆண்டில் துவக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் பல்வேறு நகரங்களுக்கு இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதிகபட்சமாக 9 மணி நேர பயண தூரத்தில் மட்டுமே இந்த ரயில்கள் செல்கின்றன .நாடு முழுவதும் தற்போது 55-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன .இந்த ரயில்களில் இருக்கைகள் மட்டுமே இருக்கின்றன. படுக்கை வசதி கிடையாது. இதனால் நீண்ட தொலைவுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இதுவரை இயக்கப்படவில்லை. எனவே இரவு நேரத்திலும் இயங்கும் வகையில் படுக்கை வசதியுடன் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ரயிலும் 20 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். பெங்களூருவில் பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் இந்த பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பெட்டிகளும் ஏ.சி மயமாக்கப்படுகின்றன. முதல் ஸ்லீப்பர் வந்தே பாரத் பெட்டிகளை அடுத்த மாதம் பெங்களூரு நிறுவனம் ஒப்படைக்கிறது. இதை அடுத்து மற்ற வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் இயக்கப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் கூறின. கேரளாவிற்கு இரண்டு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை ஒதுக்குது தொடர்பாக ரயில்வே வாரியம் பரிசீலித்து வருகிறது.


SOURCE :News

Tags:    

Similar News