கோவில்களின் நன்கொடை நிதி எங்கே? தி.மு.க அரசிடம் சரமாரியான கேள்விகளைக் கேட்ட உச்சநீதிமன்றம்..

Update: 2024-07-10 10:48 GMT

அதிகமான கோவில்களை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு அறியப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சுமார் 38 கோவில்களில் நிதி முறைகேடு நடந்து இருப்பதாகவும், மேலும் பெரும்பாலான கோவில்களில் அறங்காவலர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் தற்போது முன்வைக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து ஆலயம் காப்போம் பவுண்டேஷன் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் அவர்கள் கூறும் பொழுது, கோவில் நிதிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.

தமிழகத்தில் உள்ள கோவில் நிதியில் முறைகேடுகள் நடப்பதாக ஆலயம் காப்போம் பவுண்டேஷன் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தொடர்ந்து இருப்பது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த மனு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு வரும் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப் படுகிறது? என்று அறநிலையத்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது. உண்டியல் காணிக்கை, நன்கொடை நிதியை முறையாகச் செலவிட அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? என தமிழக அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பியது.


இதுவரை அரசு அதை எந்த மாதிரியான திட்டங்களுக்கு செயல்படுத்தி இருக்கிறது. கோவில் நன்கொடை நிதியை கல்வி நிலையங்கள் போன்ற சமூக நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தினால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் கோயில் நிதியில் உயர் ரக கார்கள் வாங்குவது, சொகுசு காரியங்களுக்காக அரசு பயன்படுத்தினால் தவறு என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News