ஆயுஷ்மான் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அடித்த ஜாக்பாட் - மகிழ்ச்சியைத் தந்த மத்திய அரசு!
ஆயுஷ்மான் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இதுவரை வழங்கி வந்த தொகையை இரட்டிப்பாக்கி மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது மத்திய அரசு.;
மத்திய அரசின் ஆயுஷ்மான் அட்டை வைத்திருக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சையின் பலனைப் பெற்று வந்தனர். தற்போது இந்த திட்டத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் வகையில், இந்த திட்டத்தின் தொகையை அரசு இரட்டிப்பாக்கியுள்ளது. தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு இருக்கும் நிலையில், இப்போது அது ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட உள்ளது. இந்த காரணத்திற்காக, இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பயனாளிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு மூன்று ஆண்டுகளுக்குள் எட்டப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவர்கள் உடனடியாக பயனாளிகளாக சேர்க்கப்படுவார்கள். நாட்டில் இதுபோன்று சுமார் 5 கோடி பேர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என்ற விதி இருந்தது.ஆனால் இப்பொழுது 70 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி பேசிய நாடாளுமன்ற உரையில் இருந்து சமீபத்தில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த உயர்வு பரிந்துரை மீதான முடிவை அரசு இறுதி செய்தால், மத்திய அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.12,076 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு மத்திய அரசு ஆயுஷ்மான் கார்டு வழங்கும். இது ஆதார் அட்டை போன்றது. பயனாளியின் குடும்பத்தினர் மருத்துவமனைக்குச் சென்று ஒரு வருடத்தில் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம். அதை இரட்டிப்பாக்கினால் ரூ.10 லட்சம் வரை கிடைக்கும்.ஆனால் இதில் ஒரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் உள்ளது. இந்த திட்டம் அனைத்து மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்படவில்லை. எனவே, எந்தெந்த மருத்துவமனைகள் செல்லுபடியாகும் என்பதை சரிபார்த்து, அந்த மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். இந்த மருத்துவமனைகளின் பட்டியலை ஆயுஷ்மான் பாரத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.
SOURCE :Newspaper