தென்னிந்தியாவிலும் வலுவாகி தனக்கென்ற தோரணையில் காலூன்றி வரும் பாஜக!

பாஜக எல்லா இடங்களிலும் தனக்கென்று தோரணையுடன் வலுவாக காலூன்றி வருவதை சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் மூலம் அறிய முடிகிறது.

Update: 2024-07-10 15:42 GMT

தென்னிந்தியாவிலும் தற்போது பாஜக வலுவாக காலூன்றி வருவதாக கட்சித் தொண்டர்கள் மத்தியில் பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜே.பி நட்டா தெரிவித்தார். திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக வெற்றி பெற்ற பின் முதல் முறையாக கேரளத்துக்கு ஜே.பி நட்டா பயணம் மேற்கொண்டார்.அப்போது புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மாநில பாஜக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது:-

பாஜகவை வட மாநில கட்சி போல் சித்தரிக்க பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் உடைத்தெறியப்பட்டு அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் முன்பை விட அதிக வாக்குகளை பாஜக பெற்றது. கேரளத்தில் ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றியும் பெற்றது. இங்கு எதிரணியாகவும் அகில இந்திய அளவில் ஒரே அணியாகவும் பயணிக்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளின் காலாவதியான கொள்கைகளை மக்கள் நிராகரித்துள்ளனர் என்றார்.

2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள கேரளா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டிலும் நாம் பிரதான கட்சியாக உருவெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் ஜே. பி.நட்டா தெரிவித்தார். மேலும் இந்திய அரசியலில் 2014-க்கு முன்பும் பின்பும் என இரண்டு அத்தியாயங்கள் மட்டுமே தற்போது உள்ளது என ஜே.பி நட்டா தெரிவித்தார்.

Tags:    

Similar News