கல்லூரி அருகே டாஸ்மாக் கடை.. போதை ஆசாமிகள் அட்டகாசம்.. நடவடிக்கை எடுக்குமா திராவிட மாடல்?

Update: 2024-07-10 16:05 GMT

கல்லூரி அருகே டாஸ்மாக் கடை:

பொதுவாக பள்ளி மற்றும் கல்லூரி அருகில் டாஸ்மாக் கடைகள் இருப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதை மீறியும் பள்ளி மற்றும் கல்லூரி அருகே டாஸ்மாக் இருந்தால் அங்கு படிக்கும் மாணவ மாணவிகள் கட்டாயம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு கல்லூரி அருகே டாஸ்மாக் இருக்கும் சூழ்நிலையில், தினமும் அங்கு படிக்கும் மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் போதை ஆசாமிகளின் கிண்டல் கேலிக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. சென்னை மேடவாக்கத்தில் கல்லூரி முன்பு மது குடித்துவிட்டு போதை ஆசாமிகள் அட்டூழியம் செய்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகளிடம் வம்பு இழுக்கும் போதை ஆசாமிகள்:

சென்னை மேடவாக்கத்தில் உள்ள கூட்ரோடு பகுதியில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த கல்லூரி அருகில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. மேலும் டாஸ்மாக் கடையை காலை முதலே திறந்து வைப்பதால், மது அருந்த போதை ஆசாமிகள் வந்துவிடுகின்றனர். பின்னர் அங்கிருந்து மதுபாட்டிலை வாங்கி வந்து கல்லூரி வளாகத்திற்கு முன்பு குடித்துவிட்டு பாட்டிலை வீசுவது, சிறுநீர் கழிப்பது, கல்லூரிக்கு வரும் மாணவிகள் மற்றும் பெண் ஆசிரியர்களை பார்த்து விசிலடிப்பது கேலி கிண்டல் செய்வது, ஆபாசமாக பேசுவது, குடித்துவிட்டு ஆடைகள் இல்லாமல் ரோட்டில் படுத்து கிடப்பது என்று தொடர்ந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருவதாக அங்கு படிக்கும் மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திமுக அரசின் முடிவு என்னவாக இருக்கலாம்?

இதன் காரணமாக கல்லூரிக்கு தினமும் சென்று வரும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பயத்துடனும்,  ஒருவிதமான தயக்கத்துடன் தான் சென்று வருகிறார்கள். மேலும் இந்த செய்தி குறித்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறும் பொழுது, "கல்லூரி அருகில் டாஸ்மாக் கடை இருந்தால் எப்படி மாணவிகள் பாதுகாப்பாக சென்று கல்வி கற்க முடியும்? பெண்களுக்கு இலவசமாக பேருந்து விட்டால் மட்டும் போதாது. மாணவிகள் நிம்மதியாக படிப்பதற்கு வசதிகள் செய்து தர வேண்டும். அதற்கு டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்தும் டாஸ்மாக்கை மூடாத திமுக அரசு இந்த சம்பவத்திற்கு என்ன செய்ய போகிறது?" என்றெல்லாம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Input & Image courtesy:News

Tags:    

Similar News