ஓய்வூதியதாரர்களுக்கு அடித்தது ஜாக்பாட் - மத்திய பட்ஜெட்டில் வெளியாக இருக்கும் குஷியான செய்தி!

மத்திய பட்ஜெட்டில் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-07-12 17:16 GMT

ஓய்வூதியதாரர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்- மத்திய பட்ஜெட்டில் வெளியாக இருக்கும் குஷியான செய்தி!

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் அங்கம் வகிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களுக்கு கடைசியாக வழங்கப்பட்ட ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக தருவதை உத்தரவாதம் அளிக்கும் வகையிலான அறிவிப்புகள் வரும் பட்ஜெட்டில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய ஓய்வூதிய முறை கடந்த 2003 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக ஊழியர்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய ஓய்வூதிய திட்டம் 2004 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.

அந்த ஆண்டிலிருந்து மத்திய அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் கட்டாயமாக்கப்பட்டது. இது வரையறுக்கப்பட்ட  ஓய்வூதிய திட்டம் ஆகும்.இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்களது அடிப்படை சம்பளத்தில் பத்து சதவீதத்தை என்.பி.எஸ் திட்டத்துக்காக பங்களிக்கிறார்கள். இதில் அரசின் பங்களிப்பு 14 சதவீதமாக உள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்.பி.எஸ் திட்டத்தை மேம்படுத்துவது குறித்து ஆராய நிதிச் செயலர் டி.வி சோமநாதன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்புவது சாத்தியம் இல்லை என்று மத்திய அரசு ஏற்கனவே நிராகரித்த போதிலும் என்.பி.எஸ்.திட்டத்தின் மூலம் ஊழியர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.


SOURCE :News 

Tags:    

Similar News