இந்து கோவில்களை மட்டும் சீரழிக்கும் தி.மு.க அரசே! இந்து கோவில்களை விட்டு வெளியேறு.. இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்..

Update: 2024-07-16 15:34 GMT

தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களை மட்டும் அரசு சீரழித்துக் கொண்டு இருப்பதாகவும், அதனால் இந்து கோவில்களை விட்டு திமுக அரசு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்து முன்னணி சாா்பில் ஜூலை 21-ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தாா். கோவை மாநகா் மாவட்ட இந்து முன்னணி பொறுப்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.


இக்கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலாளா் ஜே.எஸ்.கிஷோா் குமாா், மாவட்டத் தலைவா் கே.தசரதன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் எஸ்.சதீஷ், கோட்ட செயலாளா் பாபா. ஆ.கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளா் எம்.ஜெய்சங்கா் ஆகியோருடன் மாவட்ட, நகர, ஒன்றியப் பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

இந்த கூட்டத்தில் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசும் போது, "இந்து மதத்தையும், பசுவை வணங்குபவா்களையும் தரக்குறைவாகவும், பிரிவினையைத் தூண்டும் விதமாகவும் பேசிய கோவை இமானுவேல் தேவாலய போதகா் மீது இந்து முன்னணி அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவா் தற்போதுவரை கைது செய்யப்படவில்லை. அவரைக் கைது செய்யாவிட்டால் இந்து முன்னணி தொடா் போராட்டங்களை நடத்தும். கோயிலை மட்டும் சீரழிக்கும் அரசு, கோயிலை விட்டு வெளியேற வேண்டும்" என்பதை வலியுறுத்தி இந்து முன்னணி சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் 2024, ஜூலை 21-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Hindu Munnani

Tags:    

Similar News