புதிதாக பயமுறுத்தும் 'சந்திபுரா' வைரஸ்- பொதுமக்களே உஷார்!

குஜராத் மாநிலத்தில் 'சந்திபுரா' எனப்படும் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும் இந்த வைரஸ் பரவுதலால் இதுவரை ஆறு குழந்தைகள் பலியாகி உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2024-07-18 14:12 GMT

குஜராத்தின் ஆரவல்லி மற்றும் சபர்கந்தா மாவட்டங்களில் சந்திபுரா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவல் தொடர்பாக விளக்கம் அளித்த குஜராத் சுகாதாரத்துறை அமைச்சர் ரிஷிகேஷ் சந்திபுரா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஆறு பேர் இறந்துள்ளதாக பதிவாகியுள்ளது. தொற்று மாதிரிகளை சோதனை செய்து அதன் முடிவுகள் வெளியான பின்பு தான் இது சந்திபுரா வைரஸ் தாக்குதலா இல்லையா என்பதை சொல்ல முடியும். வைரஸ் பாதிப்பால் மூளை அழற்சி நோய் ஏற்படும் என்று மக்கள் பயப்படத் தேவையில்லை. ஆனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று கூறினார் .

மேலும் இதுவரை இந்த வைரஸ் தாக்கியிருப்பதாக சந்தேகிக்கப்படும் 12 நபர்கள் மாநில அரசின் கண்காணிப்பில் உள்ளனர். அதில் ஆறு பேர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். அது மட்டும் இன்றி ராஜஸ்தானில் இரண்டு பேருக்கும் மத்திய பிரதேசத்தில் ஒருவருக்கும் இந்த வைரஸ் தாக்கியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கப்பட்டவர்களின் உடல்களில் மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் 12 முதல் 15 நாட்களில் தெரிந்துவிடும்.

சந்திபுரா வைரஸ் தொற்றுநோய் அல்ல. ஆனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 4,487 வீடுகளில் மொத்தம் 18,646 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். கூடுதலாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2,093 வீடுகளில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தும் பணியில் மாநில சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. ஆரம்பக்கட்ட நோய் அறிகுறிகள் தெரிந்தால் உடனே அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று அமைச்சர் வலியுறுத்தினார். வைரஸ் தொற்று அறிகுறிகள், காய்ச்சல், வலிப்பு, உணர் திறன் பாதிப்பு போன்றவை ஆரம்பநிலை அறிகுறிகள். தொற்று தீவிரம் அடையும்போது கோமா மற்றும் உயிரிழப்பினை கூட ஏற்படுத்தும்.


SOURCE :News

Tags:    

Similar News