தி.மு.கவை திக்கு முக்காட வைத்த இந்து முன்னணி.. மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம்..

Update: 2024-07-21 15:23 GMT

இந்து முன்னணி அமைப்பினர் ஜூலை 21ஆம் தேதி இன்று மாநிலத் தழுவிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். இது எதற்கான ஆர்ப்பாட்டம் என்று பார்த்தால், திமுக தலைமையிலான தமிழக அரசு குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரில் கோவில் சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்துவதாகவும்,  தமிழக கோயில்களில் நடக்கும் உண்டியல் திருட்டுக்கள் குறித்தும் இந்து முன்னணியினர் கேள்வி எழுப்பி 'கோவிலை விட்டு அரசு வெளியேற வேண்டும்' என்ற கோரிக்கையுடன் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டார்கள். முறையாக அனுமதி பெற்று இருந்தும், இரவோடு, இரவாக அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து இந்து முன்னணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி இருக்கிறார்கள். அதன் காரணமாக இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த பலரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.


இந்து கோவில்களின் சொத்துக்களை மட்டும் திமுக அபகரிப்பது ஏன்?

இது தொடர்பாக இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில் கூறும் போது, "அரசு நிலங்களை விட அதிகமான நிலங்களை கிறிஸ்தவ மத ஸ்தாபனங்கள் வைத்துள்ளன. அவற்றில் ஒரு அங்குல நிலத்தை கூட பொது பயன்பாட்டுக்கு அரசு கையகப்படுத்தியது உண்டா? அதேபோல் மசூதிகளின் சொத்தாக கருதப்படும் வக்ஃப் சொத்துக்களை பாதுகாக்க அரசு, தமிழர்களின் வரிப்பணத்தில் இருந்து அள்ளிக் கொடுத்து முஸ்லிம்களை கொண்டே நிர்வாகம் செய்ய வைக்கிறது. இந்து கோயில்களின் சொத்துக்களை அரசாங்கம் திட்டமிட்டு சூறையாடுகிறது. மறுபுறம் ஆக்கிரமித்து கோயில் நிலங்கள் காணாமல் போக அதிகாரிகள் அரசியல்வாதிகள் துணை போகின்றனர். எனவே கோயில் சொத்துக்களை பாதுகாக்க தவறும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்.


கோயில் சொத்துக்களை பாதுகாக்க கடுமையான சட்ட நடைமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி பக்தர்களை ஒன்றிணைத்து 21ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறோம்" என்று இந்து முன்னணி ஏற்கனவே அறிவித்திருந்தது. இது ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டமாக இருக்கும் என்பதை இந்து முன்னணி அமைப்பினர் அறிவித்தவுடன் முறையாக அனுமதியும் பெற்று இருக்கிறார்கள். ஆனால், நள்ளிரவு திடீரென போலீசார் அனுமதி மறுத்து இருக்கிறார்கள். இதனால், காலை மாநகராட்சி அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்த தடை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநில தலைவர் உட்பட 900 நபர்களை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். இதுபோலவே தமிழகம் முழுக்க, மாவட்ட தலைநகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் இந்து முன்னணியினர் பலர் கைது செய்யப்பட்டனர்.


இந்து கோவில்களின் சொத்துகளை அரசு திட்டமிட்டு சூறையாடுகிறது:

மேலும் இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பிறகு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பத்திரிக்கையாளர்களிடம் கூறும் பொழுது, "தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த கோவில்களுக்கு பல லட்சம் ஏக்கா் நிலங்கள் உள்ளன. கோவில்களின் வருமானம், கோவில் சொத்துகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும் மட்டுமே தமிழக அரசால் இந்து சமய அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்து கோவில்களின் சொத்துகளை மாவட்ட கலெக்டர் அலுவலகம், பேருந்து நிலையம் என்று மாநில அரசு எடுத்துள்ளது. கோவில் சொத்துகளுக்கு உரிய இழப்பீடோ, வாடகையோ தருவதில்லை. இந்து கோவில்களின் சொத்துகளை அரசு திட்டமிட்டு சூறையாடுகிறது. அதனால்தான், கோவில் சொத்துகளை பாதுகாக்க வலியுறுத்தி பக்தா்களை ஒருங்கிணைத்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம்.


ஆனால், நள்ளிரவு திடீரென ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்துவிட்டார்கள். எமர்ஜென்சி காலத்தைக் காட்டிலும் மோசமாக தற்போது திமுக அரசின் நடவடிக்கை இருக்கிறது. இதை தொடர்ந்தும் ஆட்சி இப்படியே செயல்பட்டால், வரும் காலத்தில் காணாமல் போய் விடும். இந்துக்களுக்கு மட்டும் விரோதமாக நடக்கிறது. வரும் தேர்தலில் இதற்கு தக்க பாடம் புகட்ட காத்துக்கொண்டு இருக்கிறோம்" என்று கூறி உள்ளார்.

Input & Image courtesy: Hindu Munnani

Tags:    

Similar News