ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தேசமும்,தர்மமும்,கலாச்சாரமும் தான் முக்கியம் : சென்னையில் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை காண்போம்.

Update: 2024-07-22 15:19 GMT

ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தேசமே முக்கியம். நம் கலாச்சாரம் , தர்மத்திற்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் தேசத்திற்காக ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் முன் வருகின்றனர் என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா அட்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்த ஆர்.எஸ்.எஸ் குருபூஜை விழாவில் அவர் பேசியதாவது:-

ஆண்டுதோறும் குருபூஜை விழா கொண்டாடப்படுகிறது. விழாவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் காவிக்கொடிக்கு முன் தங்களால் இயன்றதை அர்ப்பணிக்கின்றனர். கடந்த 1928 முதல் குருபூஜை விழா நடந்தபோது தலைமை வகித்த சிறப்பு விருந்தினர் அமைப்புக்கு நிதி வசூலிக்க இது சிறந்த ஏற்பாடு என்றார். குருபூஜை என்பது நிதி வசூலிப்பதற்கான ஏற்பாடு அல்ல , பணம் முக்கியமல்ல. தேசத்திற்காக, தர்மத்திற்காக தங்களால் இயன்றதைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.

காவி என்பது பாரதிய கலாச்சாரம், பண்பாடு, தியாகத்தின் தர்மத்தின் அடையாளம். தனி நபர்களிடம் நிறைகுறைகள் இருக்கும். எனவே தான் காவிக் கொடியை அதாவது சித்தாந்தத்தை குருவாக ஆர்.எஸ்.எஸ் ஏற்றுள்ளது. ஒவ்வொரு ஆர்.எஸ்.எஸ் தொண்டரும் குரு தட்சணை அளிக்கிறார். அதற்கான ஏற்பாடே குருபூஜை. ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தேசமும் தர்மமும் தான் முக்கியம். நம் கலாச்சாரம் தர்மத்திற்கு ஆபத்து ஏற்படும்போதெல்லாம் தேசத்தை காக்க ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் முன்வருவார்கள். தேசத்திற்காக கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆர்.எஸ்.எஸ் ஏற்படு த்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.என் பிரகாஷ் , தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் கவர்னர் தமிழிசை உட்பட 2000 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். 

Tags:    

Similar News