மத்திய பட்ஜெட்டால் ஜொலிக்க இருக்கும் ஆந்திரபிரதேசம்!

ஆந்திர பிரதேசத்திற்காக பல சிறப்பான திட்டங்களை மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது.

Update: 2024-07-23 07:04 GMT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்துள்ளது. நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சியின் இந்த முதல் முழு பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உயர்ந்துள்ளது. பட்ஜெட்டுக்கு முன்னதாக, இந்த பட்ஜெட் 'விக்சித் பாரத்' அடித்தளத்தை அமைக்கும் என்று பிரதமர் உறுதிபட கூறினார். 'பெரிய பாய்ச்சல்' என்று பொருள்படும். 'இந்தியாவை அனைத்து துறைகளிலும் முன்னோக்கி கொண்டு செல்லக்கூடியது என்றும் பிரதமர் கூறினார். இந்தியப் பொருளாதார வளர்ச்சி உலக பொருளாதாரத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஆந்திர பிரதேசத்திற்கான திட்டங்களுக்கு ரூபாய் 15,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் போலாவரம் நீர் பாசன திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். ஆந்திர பிரதேசத்திற்கு பல்வேறு மேம்பாட்டு முகமைகள் வாயிலாக சிறப்பு நிதி உதவி அளிக்கப்படும். நாட்டின் கிழக்கு பகுதி மேம்பாட்டிற்கு 'பூர்வோதயா திட்டம்' செயல்படுத்தப்படும்.


Tags:    

Similar News