கண்டுகொள்ளாத திமுக அரசு, அத்திரமடைந்து பெண்கள் செய்த அசத்தல் காரியம்!

Update: 2024-07-27 07:29 GMT

சென்னை திருநின்றவூரில் பல வருடங்களாக குண்டும் குழியுமாக இருந்த சாலைகளை தங்கள் சொந்த செலவில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் சீரமைத்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 16 ஆண்டுகளாக திருநின்றவூரில் உள்ள ஈபி சாலையானது குண்டும் குழியுமாக இருப்பதால் அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பல நேரங்களில் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்படுவதாகவும், இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்களால் புகார் தெரிவிக்கப்பட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இதேநிலைத் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் ஒன்றிணைந்து தங்களால் முடிந்த பணத்தை திரட்டி 15 ஆயிரம் ரூபாய் கொண்டு அப்பகுதியில் உள்ள பெண்களே கான்கிரீட் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் பொழுது, ரோடு போடும் போராட்டம் ஒன்றை அறிவித்து மக்கள் மத்தியில் நிதியை திரட்டி பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து ரோடு போடும் பணியை தொடங்கி இருக்கிறோம். ஆனால் இதுவரையில் இந்த பகுதியின் கமிஷனர் ஆக இருக்கக்கூடிய அதிகாரி என்ன பிரச்சனை? என்ன போராட்டம்? என்று இந்த பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை! பெண்கள் ஒன்றிணைந்து இப்படி ரோடு போடுவது சாதாரண விஷயம் அல்ல, அதே சமயத்தில் இங்கு ரோடு போடுவதற்கு கொடுக்கப்பட்டிருந்த நிதி என்ன ஆயிற்று என்பது தான் எங்கள் கேள்வி? 

கடந்த வாரத்தில் கூட ஒரு கர்ப்பிணி பெண் இந்த சாலையில் செல்லும் பொழுது விழுந்து வலிப்பு ஏற்பட்டுவிட்டது. அதிக மக்களால் பயன்படுத்தப்படுகின்ற இந்த சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீரால் பலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. சிறு குழந்தைகள் கூட பலமுறை இந்த சாலையில் கீழே விழுந்திருக்கிறார்கள். பெண்கள் வந்து இங்கே ரோடு போட்டுக் கொண்டிருக்கிறோம், கொஞ்சம் கூட அரசுக்கு வெக்கமா இல்லையா? என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

ஒரு பக்கம் அரசு பேருந்துகளின் நிலைமை தான் கவலைக்கிடமாகவும், அரசு பேருந்துகளை பயன்படுத்தும் பொது மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்கிறது என்றால், சாலைகளும் இப்படி குண்டும் குழியுமாக கவனிக்கப்படாமல் காட்டப்பட்ட அலட்சியத்திற்கு தற்போது பொதுமக்களே போராட்டத்தின் ஈடுபட்டு கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர். 

Tags:    

Similar News