உலகிலேயே மிக உயரமான இடத்தில் சுரங்கப் பாதையை கட்டமைக்கும் இந்தியா!
உலகிலேயே மிக உயரமான இடத்தில் சுரங்கப்பாதையை கட்டமைக்கும் நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.
உலகிலேயே மிக உயரமான இடத்தில் சுரங்கப் பாதையை இந்தியா கட்டமைக்கிறது. குறிப்பாக இராணுவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இந்த பாதை கட்டப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. லடாக்கில் கட்டப்படும் இந்த ஷின்குன்லா சுரங்கப்பாதை ராணுவ ரீதியாக இந்தியாவிற்கு மிக முக்கியமான ஒரு சுரங்க பாதையாக அமைக்கப்பட இருக்கிறது. நிலத்தில் இருந்து 15,800 அடி உயரத்தில் கட்டப்படும் இந்த சுரங்கப்பாதை பணிகள் முடிவடையும்போது உலகிலேயே மிக உயரமான இடத்தில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை என்ற பெருமையை பெறும் .
இதனைப் பயன்படுத்தி பாதுகாப்பு படையினர் ராணுவ உபகரணங்களை மிக எளிதாக அவர்களுக்கு தேவையான இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும். என சொல்லப்படுகிறது. இந்த சுரங்கப்பாதை ஹிமாச்சல பிரதேசத்தையும் லடாக்கையும் இணைப்பதால் லடாக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன . இந்த ஷின்குன்லா சுரங்கப்பாதை கட்டுவதற்கான திட்டத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1681 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டப்பணிகளானது நடைபெறுகிறது .எல்லை சாலை அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த கட்டுமான பணியினை மேற்கொள்ள உள்ளனர். கிழக்குலடாக்கில் சீனாவுக்கும் இந்தியாவிற்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்படும் நிலையில் இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பது ராணுவத்திற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 13,000 அடிக்கு மேலே உயரத்தில் 825 கோடி செலவில் கட்டப்பட்ட சில சுரங்கப்பாதை கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டது .பொதுவாக இது போன்ற எல்லை பகுதிகளில் கட்டப்படும் சுரங்க பாதைகளில் வெடி மருந்துகள், ஏவுகணைகள், எரிபொருள் மற்றும் பிற முக்கிய இராணுவ உபகரணங்களை சேமிக்கும் இடமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். குறுக்கு வழித்தடங்களை கொண்ட வகையில் இது கட்டப்படுகிறது. இந்த கட்டுமான பணிகள் முடிவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என சொல்லப்படுகிறது.