நரிக்குறவர் சமுதாயத்தில் கிறிஸ்தவ மதமாற்றம்.. தடுத்து நிறுத்திய இந்துமுன்னணி..
மதமாற்றம் தமிழகத்தில் தற்போது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஏழை, எளிய நடுத்தர மக்களை குறிவைத்து அரங்கேறும் இந்த மதமாற்றமானது கிராமங்களிலும் அதிகமாக நடந்து வருகிறது. அடிப்படை தேவைகளுக்காக பிறரிடம் உதவியை நாடும் சமூகத்தினரை குறி வைத்து மதமாற்றம் சுலபமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வேலூர் மாவட்டத்தில் நரிக்குறவ சமூகத்தை சேர்ந்த மக்களிடம் கிறிஸ்துவ மிஷனரிகள் சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியினருக்கு தகவல் கிடைத்து இருக்கிறது.
அதன் பெயரில் இந்து முன்னணியினர் அங்கு விரைந்து சென்று மத மாற்றத்தில் ஈடுபட்ட நபர்களை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள சொற்கள் பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோ பதிவையும் இந்து முன்னணியினர் தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.
அதில் அவர்கள் கூறும் பொழுது, "வேலூர் மாவட்டத்தில் உள்ள சொற்கள் பேட்டை கிராமத்தில், நரிக்குறவர்களுக்கு உதவி செய்கிறோம் என்ற பெயரில், கிறிஸ்தவ மதமாற்றம் செய்து கொண்டிருந்தனர். அதில் சிலர் இந்து முன்னணி தொடர்பு கொண்டு எங்கள் நரிக்குறவர் சமுதாயத்தை மதமாற்றம் செய்து கொண்டுள்ளனர். நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்கள். உடனே அங்கு இந்து முன்னணி பொறுப்பாளர்கள் சென்று கிறிஸ்துவ மதமாற்றத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்" என்று கூறி இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News