கேரளாவில் நிலச்சரிவில் பலியான ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா இரண்டு லட்சம் நிதி- இரங்கலுடன் அறிவித்த மோடி!

கேரளாவில் இன்று அதிகாலை பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டு 70-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-07-30 17:00 GMT

கேரள மாநிலம் வயநாடு அருகே சூரல் மலைப்பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கிய 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கிய 500 குடும்பங்களைச் சேர்ந்த 1000 பேரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வயநாடு சூரல்மலை மீட்பு பகுதியில் விமானப்படை ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டு வருகின்றன.

கேரளாவின் வயநாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவு குறித்து கேரள முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் தொலைபேசியில் விவரங்களை கேட்டறிந்துள்ளனர். மேலும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.


SOURCE :News 

Tags:    

Similar News