தொழில் உரிமக் கட்டணம் அதிரடி உயர்வு.. இதுதான் திராவிட மாடலா என புலம்பும் சென்னை மக்கள்..

Update: 2024-08-02 16:58 GMT

கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (GCC) சுமார் 200 வகையான வணிகங்களுக்கான தொழில் உரிமக் கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. இது சிறு மற்றும் பெரிய நிறுவனங்களை பெரிதும் பாதிக்கும். 30 ஜூலை 2024 அன்று GCC கவுன்சிலால் எடுக்கப்பட்ட இந்த முடிவு, மாநகராட்சியின் வருவாயை சுமார் ₹100 கோடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டண உயர்வு நகரத்தில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள சுமார் 75,000 நிறுவனங்களை பாதிக்கும், அவை நான்கு குழுக்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளன. உதாரணமாக, குறைந்தபட்சம் 5,000 சதுர அடி பரப்பளவில் திருமண மண்டபங்களுக்கான வருடாந்திர உரிமக் கட்டணம் ₹10,000லிருந்து ₹30,000 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கட்டணத்தை இரண்டு மடங்கு அதிகரித்து இருக்கிறார்கள்.


லாட்ஜிங் ஹவுஸ் மற்றும் சர்வீஸ் அபார்ட்மென்ட்கள், முன்பு உரிமக் கட்டணம் செலுத்தாதவர்கள், இனி ஆண்டுக்கு ₹25,000 செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. அலுமினியம் மற்றும் பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பதற்கான கட்டணம் முறையே ₹600 மற்றும் ₹250ல் இருந்து தலா ₹15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சலூன்கள் இப்போது அவற்றின் அளவைப் பொறுத்து ₹200 முதல் ₹10,000 வரை செலுத்தும். அழகு நிலையங்கள், முன்பு ஆண்டுக்கு ₹500 செலுத்தி வந்தது அதனுடைய கட்டணம் தற்போது, ₹6,000 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய மாற்றங்கள் காரணமாக சுற்றுலாத்துறை பெருமளவு பாதிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் சுற்றுலா பயணிகள் அதிகமாக தங்கும் விடுதி கட்டணங்கள் முதல் அனைத்து கட்டணங்களும் தற்போது உயர்த்தப்பட்டு இருக்கிறது.


பல்பொருள் அங்காடி நிலையங்களுக்கு ₹5,000 முதல் ₹.20,000 வரையிலும், சலூன்களுக்கு ₹2,500 முதல் ₹10,000 வரையிலும், ஹெல்மெட் கடை, ஜூஸ் கடை, மருந்தகம் உள்ளிட்ட கடைகளுக்கு ₹1,500 முதல் ₹10,000 வரையிலும் உரிமக் கட்டணம் உயர்த்தப் பட்டிருக்கிறது. போட்டோ ஸ்டூடியோவுக்கு ₹.3,000-ல் இருந்து ₹.10,000, நகைக் கடைகளுக்கு ₹1,500-ல் இருந்து ₹20,000, துணிக்கடைகளுக்கு ₹1,000-ல் இருந்து ₹.10,000 வரையும் கட்டணம் உரிமக் கட்டணத்தை உயர்த்தி மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்  பட்டிருக்கிறது.  


மற்ற மாவட்டங்களில் ஒப்பிடும் பொழுது ஏற்கனவே சென்னையில் விலைவாசி அதிகமாகத்தான் இருந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய தொழிலுக்காக சென்னை போன்ற பெரு நகரங்களை நம்பி வேலைக்கு வருகிறார்கள். அத்தகைய அன்றாடம் வேலை செய்யும் மக்களின் வாழ்க்கை நிலை இந்த கட்டண உயர்வின் காரணமாக பெருமளவில் பாதிக்கும். குறிப்பாக திருமண மண்டபங்கள் முதல் சாதாரண உணவகங்கள், விடுதிகள், டீக்கடை, பேக்கிரி, சலூன்கள் போன்ற பல்வேறு விற்பனை நிலையங்களில் தொழில் உரிமக் கட்டணத்தை சென்னை மாநகராட்சி உயர்த்தி இருப்பது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.


திமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏற்கனவே மூன்று முறை மின்சார கட்டணம் உயர்வு, பால் விலை, சொத்து வரி உயர்வு போன்ற பல்வேறு கட்டணங்களில் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், தற்பொழுது வணிக நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் தொழில் உரிமக் கட்டணம் அதிகரித்து இருப்பது ஏழை, எளிய மக்களை பெருமளவில் பாதிக்கும். வணிகர்களிடமிருந்து மாநகராட்சி அதிகமான வரிகளை விதிப்பதன் காரணமாக அத்தகைய நிறுவனங்களை நம்பி இருக்கும் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் அதிகமான தொகையை வசூல் செய்ய நேரிடும். இதன் காரணமாக மறைமுகமாக சென்னை வாழ் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை திமுக அரசு அறிந்தும் இத்தகைய நடவடிக்கையை எடுத்து இருக்கிறதா? அது மட்டும் கிடையாது இந்த ஒரு நடவடிக்கை காரணமாக சென்னை மாநகராட்சி ரூபாய் 100 கோடி வருவாய் அதிகமாக பெறும், ஆனால் இதன் மூலம் அதிகமாகும் விலைவாசி ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் என்பது திமுகவிற்கு தெரியாதா? என்று சமூக வலைத்தளங்களில் கூட நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து இருக்கிறார்கள். 

Input & Image courtesy: The Commune News

Tags:    

Similar News