கோவில் நிகழ்ச்சியை புறக்கணித்த அமைச்சர்.. தமிழக இந்துக்கள் செய்த தரமான சம்பவம்..

Update: 2024-08-04 02:22 GMT

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு முருகன் திருக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களை ஊர் கிராம பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். நிச்சயம் தான் வருவதாக கூறி அமைச்சர் கடைசிவரை வரவில்லை. இதன் காரணமாக கோவில் கும்பாபிஷேகத்திற்கு அமைச்சர் கொடுத்த பணத்தை மக்கள் திருப்பி கொடுத்து இருக்கிறார்கள் என்ற செய்தி தற்போது வைரலாகி வருகிறது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இருந்து வருகிறார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி அருகே டி.இடையபட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முருகன் திருக்கோயில் கும்பாபிஷேகம் சென்ற மாதம் ஜூன் 22 ஆம் தேதி நடைபெற்றது.


அப்பொழுது உறுதியாக வருவதாக கூறிய திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு மாதம் ஆகியும் வரவில்லை. அமைச்சர் வருவார் என்று இந்துக்கள் எதிர்பார்த்த போது 28 ஆம் தேதி உறுதியாக வருவதாக உறுதி கூறி மீண்டும் இந்துக்களை ஏமாற்றியதால் இடையபட்டி மக்கள் அவருக்காக ஏற்பாடு செய்திருந்த மாலை பிரசாதம் மற்றும் அவர் கொடுத்திருந்த நன்கொடை ரூ10,000-தோடு நூறு ரூபாய் சேர்த்து ரூ 10,100யை திமுக நிர்வாகிகளிடம் கொடுத்து அனுப்பினர்.


இது தொடர்பாக இந்து முன்னணியினர் தம்முடைய சமூக வலைத்தள பக்கங்களில் கூறும் பொழுது, "அமைச்சரின் செயலுக்கு தகுந்த பதிலடி கொடுத்த இந்து பக்தர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் என்றும், இந்த தரமான சம்பவம் இனிவரும் காலங்களில் இந்துக்கள் பண்டிகையை புறக்கணிப்பவர்களுக்கு தகுந்த பாடமாக இருக்கும் என்றும் இந்து முன்னணி நம்புகிறது. இதுபோன்று இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் விழிப்புணர்வுடன் இருக்க இந்து முன்னணி நம் சமுதாயத்தை கேட்டுக்கொள்கிறது" என குறிப்பிட்டு கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News