பிரதமர் மோடி அரசின் முன்னோடி திட்டங்கள்.. மின்னல் வேகத்தில் செல்லும் இந்தியாவின் ஏற்றுமதி..
நாட்டில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும் முன்னோடித் திட்டமான பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத்திட்டம் 2024-25- ஆண்டிற்குள் மீன்வள ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 23-24-ம் ஆண்டில் ரூ.60,523.89 கோடி மதிப்பிலான மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்பது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
மீன்வளத் துறையின் உலகளாவிய போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்காக, தரமான மீன் உற்பத்தி, இனங்களை பன்முகப்படுத்துதல், ஏற்றுமதி சார்ந்த உயிரினங்கள் ஊக்குவித்தல், உற்பத்தியை தரநிலைகள் மற்றும் சான்றிதழ், பயிற்சி, திறன் மேம்பாடு, மீன்பிடிப்பை சுகாதாரமான முறையில் கையாளுவதற்கான நவீன மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்களை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத்திட்டம் ஆதரவு அளிக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 2023-24ம் ஆண்டில் 182.70 லட்சம் டன் மீன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. ரூ.60,523.89 கோடி மதிப்பிலான 17,81,602 மெட்ரிக் டன் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீப் ரஞ்சன் சிங் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் தெரிவித்தார்.
Input & Image courtesy: News