யு.பி.ஐ பரிவர்த்தனையில் புதிய அம்சத்தை அறிவித்த சக்திகாந்த தாஸ்! ஒரே கணக்கில் இரு நபர்கள் பரிவர்த்தனை..
மும்பையில் கடந்த மூன்று நாட்களாக ரிசர்வ் வங்கி கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தின் முடிவில் நேற்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ வெட்டி விகிதம் 6.50 சதவீதமாக தொடரும் என கூறினார். மேலும், காசோலைகள் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு இரண்டு நாட்கள் ஆகிறது. அதனால் நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ் போன்று காசோலையையும் டெபாசிட் செய்தால் சில மணி நேரங்களுக்குள் காசோலையின் பரிவர்த்தனைகளையும் முடிக்கும் வகையில் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார்.
அதுமட்டுமின்றி யு.பி.ஐ மூலம் வரி செலுத்துவதற்கான உச்சவரம்பையும் 1 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளதாகவும், இதனால் வரி செலுத்துவோரின் வேலை சுலபமாகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய ஆர்.பி.ஐ கவர்னர், யு.பி.ஐ பரிவர்த்தனையில் மிகப்பெரிய மாற்றம் அறிமுகமாகியிருக்கிறது, அதாவது ஒருவர் தன் வங்கி கணக்கில் இருந்து தன் குடும்ப உறுப்பினர் ஒருவரை குறிப்பிட்ட தொகை வரை பண பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கலாம். இதற்காக யு.பி.ஐ உடன் இணைக்கப்பட்ட மற்றுமொரு தனி வங்கி கணக்கும் தேவையில்லை, இதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.
Source : Dinamalar