சாமி ஊர்வலம் செல்லும் போது கொட்டு, மேளத்துக்கு தடை.. இந்து முன்னணி வன்மையான கண்டனம்..

Update: 2024-08-20 02:47 GMT

மதுரையில் பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருக்கோவிலில் சாமி ஊர்வலம் போது கொட்டு மேளத்திற்கு அரசு தடை செய்து இருக்கிறது. இதற்கு இந்து முன்னணி தன்னுடைய வன்மையான கண்டன பதிவு செய்து இருக்கிறார்கள். இது குறித்து அவர்கள் கூறும் பொழுது, "பல்வேறு பண்பாடு, பாரம்பரியம் கொண்ட தமிழர்களின் வழிபாட்டு முறையில் தேவையில்லாமல் தலையிட்டு சீர்குலைப்பது மற்றும் தடுத்து நிறுத்துவதை திராவிட மாடல் அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்து மதத்தில் தான் பல்வேறு இசைக்கருவிகள் வாசித்து இறைவனை துதி பாடுவதும், மேள தாளங்கள் முழங்க ஆடிப் பாடுவதும் பண்பாடாகவே காலம் காலமாக இந்து மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. எல்லாம் வல்ல சிவபெருமான் கையில் உடுக்கை, விஷ்ணு கையில் சங்கு, கண்ணன் கைகளில் புல்லாங்குழல், நந்தியம் பெருமான் கையில் மிருதங்கம், நாரதர் கைகளில் வீணை, இப்படி இந்து மத கடவுள்கள் மேளதாளங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.


அப்படி இருக்கையில் இந்து மதக் கடவுள்களை வழிபாடு செய்யும் பக்தர்கள் செல்லும் திருவிழா ஊர்வலத்துக்கு கொட்டு அடித்ததை தடுத்து நிறுத்தியது கடும் கண்டனத்திற்குரியது. இந்து சமுதாயத்தில் திருவிழாவிற்கும் திருமணத்திற்கும் இறுதிச் சடங்குகள் போன்றவைகளுக்கும மேளதாளங்களுடன் ஊர்வலமாக செல்ல சட்டரீதியாக அனுமதி இருக்கும்போது அதைத் தடுத்து நிறுத்தியது சட்டத்தை அவமதித்த செயலாகும். தமிழகத்தில் திமுக திராவிட மாடல் அரசு வேண்டுமென்றே ஓட்டுக்காக சிறுபான்மை முஸ்லிம் கிறிஸ்தவர்களை திருப்திப்படுத்த இந்துக்கள் மீதும், இந்து கோவில் திருவிழாக்களின் மீதும் இந்துக்களின் உரிமைகள் மீதும் அடக்குமுறையை கையாள்வதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News