குரங்கு அம்மைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - துரிதமாக மக்களைக் காக்கும் பணியில் மத்திய அரசு!
குரங்கு அம்மை நோய் பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு.
உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருபவர்களை பரிசோதனை செய்த பிறகு அனுமதிக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்றுநோய். இந்த நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். இது மனிதர்களிடையே எளிதில் பரவாது நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்கு பரவுகிறது.
சமீபத்தில் உலக நாடுகளிடையே குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில் சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிறப்பித்தது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீப காலமாக தென்பட்ட இந்த நோய் இப்போது ஐரோப்பிய ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. சிங்கப்பூரில் கூட 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க விமான நிலையங்கள் எல்லைகளில் பயணிகளுக்கான பரிசோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.