லட்சாதிபதி சகோதரிகள் மாநாடு.. ஒட்டுமொத்த சமுதாயத்தை மாற்றும் மோடி அரசின் முயற்சி..
மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் நடைபெற்ற லட்சாதிபதி சகோதரிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். தற்போதைய அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் சமீபத்தில் லட்சாதிபதி ஆன 11 லட்சம் புதிய சகோதரிகளுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். நாடு முழுவதிலும் உள்ள லட்சாதிபதி சகோதரிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெரும் திரளான தாய்மார்கள், சகோதரிகளுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் தமது உரையைத் தொடங்கினார்.
லட்சாதிபதி சகோதரிகள் இயக்கம் தாய்மார்கள், சகோதரிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழி மட்டுமல்ல என்றும் குடும்பம் மற்றும் எதிர்கால சந்ததியினரை வலுப்படுத்துவதற்கான ஒரு பெரிய இயக்கம் என்றும் அவர் கூறினார். வருமானம் அதிகரிக்கும் போது ஒரு குடும்பத்தின் வாங்கும் சக்தியும் அதிகரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். ஒரு சகோதரி லட்சாதிபதி சகோதரியாக மாறும்போது ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்காலமும் சிறப்பாக மாறுகிறது என்று அவர் மேலும் கூறினார். லட்சாதிபதி சகோதரிகளை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண்மை, விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் உரையாற்றினார். கடும் மழையையும் பொருட்படுத்தாமல் அதிக எண்ணிக்கையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக அவர்களை சௌகான் பாராட்டினார்.
"எந்த ஒரு சகோதரியும் ஆதரவற்றவராக இருக்கக் கூடாது, எந்த சகோதரியின் கண்களும் கண்ணீர் சிந்தக் கூடாது, அவரது முகத்தில் எப்போதும் புன்னகை இருக்க வேண்டும்" என்பதே பிரதமர் நரேந்திர மோடியின் தீர்மானம் என்று சிவராஜ் சிங் சௌகான் கூறினார். இதற்காகவே பிரதமர் திரு நரேந்திழ மோடி லட்சாதிபதி சகோதரிகள் இயக்கத்தை தொடங்கியதாக அவர் தெரிவித்தார். வளர்ந்த இந்தியாவை உருவாக்க மூன்று மடங்கு பலத்துடன் பணியாற்றப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கூறியதை சௌகான் நினைவு கூர்ந்தார். பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்ற இரட்டிப்பு வலிமையுடன் பணியாற்ற நாம் உறுதியேற்க வேண்டும் என அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கேட்டுக் கொண்டார்.
Input & Image courtesy: News