ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் பயனடையும் தெற்கு ரயில்வே ஊழியர்களின் அபார எண்ணிக்கை!
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் 62, 706 ஊழியர்கள் பயனடைவர் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தெற்கு ரெயில்வேயில் பணிபுரியும் 62,706 ஊழியர்கள் பயனடைவர் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி குறிப்பு :-
அரசு ஊழியர்கள் குடும்ப ஓய்வூதியர்களுக்கு சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்க வகை செய்யும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் மூலம் தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் 62,706 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயனடைவர்.
தற்போது தெற்கு ரயில்வேயில் பணியாற்றும் 81,311 ஊழியர்களில் 18,605 பேர் பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வருகின்றனர் மீதமுள்ள 439 அதிகாரிகள் மற்றும் 62,267 பணியாளர்கள் என 62 ஆயிரத்து 706 பேர் பேர் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வருகின்றனர். இவர்கள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள யுபிஎஸ் திட்டத்தின் கீழ் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.