பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்குத் திட்டம்.. மோடி அரசின் சரித்திர சாதனை..
மக்கள் வங்கிக் கணக்குத் திட்டம் என்பது அனைவரையும் உள்ளடக்கிய நிதி மாற்றத்திற்கு மட்டுமல்ல, சமூக - பொருளாதார மாற்றத்திற்கும் உதவுகிறது. நாட்டின் நிதி வரலாற்றில் மிகவும் மாற்றத்தை ஏற்படுத்தும் முன்முயற்சிகளில் ஒன்றான பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்கு திட்டம் இன்று அதன் 10-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ் 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், நிதி உள்ளடக்கத்திற்கான உலகளாவிய அளவுகோலாக மாறியுள்ளது. வங்கிச் சேவைகளை நாட்டின் தொலைதூர பகுதிகளில் உள்ளவர்கள் உட்பட ஒவ்வொரு இந்தியரின் அருகாமையில் கொண்டு வருகிறது.
ஐ.ஏ.என்.எஸ் நியூஸுடனான ஊடக உரையாடலில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இது குறித்து பேசிய போது, இந்தத் திட்டம் பிரதமரின் தொலைநோக்கு தலைமைக்கு முன்மாதிரி என்று பாராட்டினார். பிரதமர் மோடி பதவியேற்ற சில மாதங்களுக்குள் இந்த புரட்சிகரமான திட்டத்தைத் தொடங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுநோய்களின் போது இத்திட்டத்தின் வெற்றி நிரூபிக்கப்பட்டது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார், அங்கு இந்த திட்டம் தடையற்ற நேரடி பணப் பரிமாற்றங்களை எளிதாக்குவதன் மூலம், சுமார் 80 கோடி குடும்பங்களில் பட்டினியைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தது என்று கூறினார்.
குறைந்தபட்ச இருப்பு இல்லா கணக்கு, இலவபச ரூபே அட்டை, ரூபே பற்று அட்டை மூலம் ரூ.2 லட்சம் விபத்துக் காப்பீடு, 10 ஆயிரம் ரூபாய் மிகைப் பற்று வசதி ஆகியவற்றை தகுதியான கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்குவதாக அவர் கூறினார். இத்திட்டத்தின் சமூக-பொருளாதார தாக்கத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார். ஒவ்வொரு வீட்டிலும் பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது என்றும் இக்கணக்கு வைத்திருப்பவர்களில் 55.6% க்கும் அதிகமானோர் பெண்கள் என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.
Input & Image courtesy: News