பாரம்பரிய பழக்கத்தை மாற்றுகிறதா அறநிலையத்துறை? பெயின்ட் கோலத்தால் பக்தர்கள் அதிருப்தி..
தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாக மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் இருந்து வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பக்தர்களும் வருகை தந்து ஆசீர்வாதங்களை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களில் அதிசயங்களில் ஒன்றான பொற்றாமரை குளம் திருவிளையாடல் புராணங்களில் இடம்பெற்றதாக புறப்படுகிறது. கோவிலுக்குள் பொற்றாமரை குளத்தை சுற்றியும், குறிப்பிட்ட இடங்களில், திருவிழா காலங்களில் அரிசி மாவு, சுண்ணாம்பு கோலமிடுவது வழக்கம்.
ஆனால், தற்போது பெயின் டால் கோலமிட்டு வருவது, பக்தர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கூறுகையில், "கோவில் பூஜை, நடை முறைகள் எல்லாவற்றிலும் ஐதிகம் பார்ப்பதும், மரபு கடைப்பிடிப்பதும் வழக்கம். தற்போது, பெயின்ட் கோலத்தால் கற்களின் ஈரத்தன்மை பாதித்து, வெடிப்பு ஏற்படவாய்ப்புள்ளது. நம்முடைய பாரம்பரிய பழக்க வழக்கங்களை மறந்து இப்படி அவற்றை மாற்றுவது நியாயமாக இருக்காது என்று அவர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் தூண்கள் அனைத்தும் தரைதளத்துடன் இணைந்துள்ளதால், காலப் போக்கில் உறுதித்தன்மை கேள்விக்குறியாகும். இதை தவிர்க்க பழங்கால முறைப்படி, மாவு கோலமிட நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்" என்றனர்.
Input & Image courtesy: News