இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் விமான பயணம்!
இந்தியாவில் விமான பயணம் குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
சிவில் விமான போக்குவரத்து தொடர்பான இரண்டாவது ஆசிய பசிபிக் மந்திரிகள் மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது இதில் 29 நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர் பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-
நாட்டின் முக்கிய வளர்ச்சியில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை பங்காற்றுகிறது மற்றும் பல வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டுள்ளது .கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது சிலருக்கு மட்டுமே சொந்தமாக இருந்து வந்த விமான பயணம் தற்போது அனைவருக்கும் ஆனதாக மாறி உள்ளது.
பிராந்திய விமான இணைப்பு திட்டமான உதான் திட்டத்தின் கீழ் நடுத்தர மக்கள் விமானம் பறக்க முடிந்தது 1.40 கோடி மக்கள் விமானத்தில் பயணம் செய்துள்ளனர் .அவர்களில் பலர் முதல்முறையாக விமானத்தில் பறந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் விமான பயணம் பாதுகாப்பானதாகவும் குறைந்த கட்டணம் கொண்டதாகவும் அனைவருக்கும் கிடைப்பதாகவும் மாறிவிட்டது. அதிகரித்து வரும் பயண தேவைக்கு மத்தியில் மேம்பட்ட விமான இயக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன. பறக்கும் டாக்சியில் பயணம் செய்யும் நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு மோடி கூறினார்.