இந்தியாவை நிமிர்ந்து பார்க்கும் உலக நாடுகள்.. மோடி அரசின் திட்டம்.. சாத்தியமானது எப்படி?

Update: 2024-09-26 16:06 GMT

இந்தியாவில் இறக்குமதிகள் அதிக அளவில் குறைக்கப்பட்டு ஏற்றுமதிகள் தான் பெருமளவில் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் அதிக அளவில் இந்தியா வெளிநாட்டு பொருட்களை நம்பி இருக்காமல் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக அதிக அளவில் பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து வருகின்றன. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இதற்கு பல்வேறு வகையில் உதவி செய்து இருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டம் தற்போது அனைத்து துறைகளிலும் பிரபலமடைந்து வருகிறது.

'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற தலைப்பில் சிந்தனைகளை பகிர்ந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற உணர்வை ஊக்குவித்த புதுமையாளர்கள் மற்றும் செல்வத்தை உருவாக்குபவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம், வளர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது என்றும், நமது இளைஞர் சக்திக்கு பெரிய கனவு காண சிறகுகளை வழங்கியுள்ளது என்றும் மோடி கூறியுள்ளார்.


இந்தியாவில் தயாரிப்போம் குறித்த பிரதமரின் எண்ணங்களை லிங்க்டு இன் இணையதளத்தில் காணலாம். பிரதமர் தமது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, "@makeinindia உணர்வை ஏற்படுத்திய ஒவ்வொரு புதுமையாளருக்கும், செல்வத்தை உருவாக்குபவருக்கும் ஒரு வணக்கம். இந்த முயற்சி, வளர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளதுடன், எங்களது இளைஞர் சக்திக்கு பெரிய கனவு காண சிறகுகளை வழங்கியுள்ளது என கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News