டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுக்க ஆசியான் - இந்தியா கூட்டறிக்கை.. பட்டையை கிளப்பும் மோடி அரசு..

Update: 2024-10-11 17:00 GMT

ழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்) மற்றும் இந்தியா அமைப்பின் உறுப்பு நாடுகளான நாம், 2024 அக்டோபர் 10 அன்று லாவோஸ் நாட்டின் வியன்டியானில் 21-வது ஆசியான் - இந்தியா உச்சிமாநாட்டின் போது வெளியிட்ட கூட்டறிக்கை. ஆசியான் – இந்தியா நினைவு உச்சி மாநாட்டின் (2012) தொலைநோக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள், ஆசியான் – இந்தியா பேச்சுவார்த்தையின் உறவின் 25-வது ஆண்டு நிறைவைக் (2018) குறிக்கும் வகையில், நடைபெற்ற ஆசியான் – இந்தியா நினைவு உச்சிமாநாட்டின் தில்லி பிரகடனம், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளமையில் ஒத்துழைப்பதற்கான ஆசியான் – இந்தியா கூட்டறிக்கை (2021), ஆசியான் – இந்தியா விரிவான பேச்சுவார்த்தை ஒத்துழைப்பு கூட்டறிக்கை (2022), கடல்சார் ஒத்துழைப்புக்கான ஆசியான் – இந்தியா கூட்டறிக்கை (2023) மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை வலுப்படுத்துவதற்கான ஆசியான் – இந்தியா தலைவர்களின் கூட்டறிக்கை 2023 உட்பட ஆசியான் – இந்தியா அமைப்பு 1992-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதிலிருந்து, அடிப்படைக் கொள்கைகள், பகிர்ந்துகொள்ளப்பட்ட நன்மதிப்புகள் மற்றும் விதிமுறைகளின் வழிகாட்டுதலுடன், இந்த அமைப்பை வழிநடத்திச் செல்லும் ஆசியான் – இந்தியா விரிவான உத்திசார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான உத்தரவாதத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.


டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிப்பதில் டிஜிட்டல் பொது கட்டமைப்புகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிப்பதுடன், உள்ளடக்கிய தன்மை, திறமை மற்றும் பொதுச் சேவை வழங்குவதில், புதுமைகளை ஊக்குவிப்பதுடன் தனிநபர்கள், சமுதாயங்கள், தொழில் நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச அம்சங்களையும் கருத்தில் கொண்டு, உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைப்பதை ஏற்கிறோம்.

இந்தப் பிராந்தியத்தில் தற்போது நிலவும் டிஜிட்டல் பிளவுகளை ஒன்றிணைப்பதற்கு விரைவான மாற்றத்தைத் தொழில்நுட்பத்தால் ஏற்படுத்த முடியும் என்பதையும், உள்ளடக்கிய மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான முன்னேற்றத்தை விரைவுப்படுத்தும் அதே வேளையில் பிராந்தியத்தின் பொருளாதார ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதையும் அங்கீகரிக்கிறோம்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News