நாட்டின் உள்கட்டமைப்பில் புரட்சியை ஏற்படுத்தும் 'கதி சக்தி' திட்டம்!

நாட்டின் உள்கட்டமைப்பில் புரட்சி ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது கதிசக்தி திட்டம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2024-10-14 10:07 GMT

பிரதமரின் 'கதிசக்தி தேசிய மாஸ்டர் பிளான்' என்ற திட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி தொடங்கப்பட்டது. பல்வேறு பொருளாதார மண்டலங்களுக்கு பன்முனை இணைப்பு உள்கட்டமைப்பு வசதியை அளிப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டது. ரயில்வே சாலைகள், துறைமுகங்கள் ,நீர் வழிகள் ,விமான நிலையங்கள் ,மக்கள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆகிய உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்ற இத்திட்டம் பயன்படுகிறது. இத்திட்டம்  மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தது. இதை ஒட்டி பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார் .அதில் அவர் கூறியிருப்பதாவது :-

பிரதமரின் கதிசக்தி திட்டம் இந்தியாவின் உள்கட்டமைப்பில் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட மாற்றம் ஏற்படுத்தும் முயற்சியாக உருவெடுத்துள்ளது. பன்முனை இணைப்பு வசதியை கணிசமாக அதிகரித்துள்ளது. பல்வேறு துறைகளில் வேகமான உறுதியான வளர்ச்சியை விரைவுபடுத்தி உள்ளது. அனைத்து தரப்பினரின் தடையற்ற ஒருங்கிணைப்பால் சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளது. தாமதம் குறைந்துள்ளது .பல்வேறு நபர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.' கதிசக்தி' திட்டத்தால் வளர்ந்த இந்தியா என்ற நமது கனவை நிறைவேற்றுவதற்கான வேகத்தை இந்தியா அதிகரித்துள்ளது. மேலும் அத்திட்டம் முன்னேற்றம், தொழில் முனைவு ,புத்தாக்கம் ஆகியவற்றுக்கு ஊக்கம் அளிக்கும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News